சுயதொழிலுக்கு வங்கிக் கடன் – ஜனாதிபதி அறிவிப்பு!

சுயதொழில் செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது எதிர்காலம்” என்ற சிநேகபூர்வ சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுயதொழில் செய்யும் தொழில்முனைவோருக்கு உதவிகளை வழங்க எதிர்பார்க்கிறோம். கடந்த பொருளாதார நெருக்கடியின் போது, சுயதொழில் செய்தவர்கள் சரிவைச் சந்தித்தனர்.
ஒரே நேரத்தில் பெருமளவானவர்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கினால் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம்.
எனவே, சுயதொழில் செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வங்கிக் கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பு சுயதொழில் செய்பவர்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனை வசூலிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
சுற்றுலா தொடர்பான சுயதொழில்கள் அதிக நாட்டம் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் சுற்றுலா வணிகம் தற்போது பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.