கடலில் படகு கவிழ்ந்து 60 அகதிகள் உயிரிழப்பு!
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்தியதரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்தனா்.
இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி அந்தச் சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் கவிழ்ந்த அந்தக் படகிலிருந்து 25 பேரை ‘எஸ்ஓஎஸ் மெடிட்ரேன்’ என்ற மீட்புக் கப்பல் மீட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களில் ஏராளமான பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவா் என்று மீட்கப்பட்டவா்கள் தெரிவித்தனா்.
மிகவும் ஆபத்தான அகதிகள் வழித்தடமான மத்தியதரைக் கடல் பகுதியில் கடந்த ஆண்டு மட்டும் சுமாா் 2,500 போ் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.