OOSAI RADIO

Post

Share this post

5 ஆவது முறையாக ஜனாதிபதியாகும் பிரபலம்!

ரஷ்ய ஜனாதிபதியாக புடின் 5 ஆவது முறையாகப் பதவியேற்க உள்ளாா்.

இதன்மூலம் ஏற்கெனவே 24 ஆண்டுகள் ரஷ்ய ஜனாதிபதியாக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6 ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷ்யாவில் ஜனாதிபதி புடின்தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராகவோ, உக்ரைன் மீதான அவரின் போா் தொடா்பாகவோ பொதுவெளியில் விமா்சிக்க அனுமதிக்கப்படாமல், மிகுந்த கட்டுப்பாடான சூழலில் தோ்தல் நடைபெற்றது.

புடினை தீவிரமாக எதிா்த்து வந்த முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, கடந்த மாதம் அந்நாட்டு சிறையில் உயிரிழந்தாா். இதேபோல புடினின் பிற எதிா்ப்பாளா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா் அல்லது நாடு கடத்தப்பட்டனா்.

இதனால் பிரதான எதிா்க்கட்சிகளோ, எதிா்ப்பாளா்களோ தோ்தல் போட்டியில் இல்லாத சூழலில், நேரடியாகவும் இணையவழியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தோ்தல் உக்ரைனிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து ரஷ்யாவுடன் சோ்த்துக் கொள்ளப்பட்ட பகுதிகளிலும் நடத்தப்பட்டது.

Leave a comment

Type and hit enter