OOSAI RADIO

Post

Share this post

அன்று தோற்றவர் இன்று வென்றார்!

அமெரிக்காவில் நடைபெறும் மாஸ்டா்ஸ் டென்னிஸான இண்டியன் வெல்ஸ் ஓபனில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் – ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் செட்டில் மெத்வதெவ் 3-0 என முதலில் ஆதிக்கம் செலுத்தினார். அல்கராஸ் புத்துணர்வுடன் மீண்டு வந்து, 7-6 என முதல் செட்டினை வென்றார்.

அடுத்த செட்டில் மெத்வதேவ்-க்கு வாய்ப்பே அளிக்காமல் 6-1 என்ற கேம்களில் அசத்தல் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றார்.

இது இவருக்கு 2 வது இண்டியன் வெல்ஸ் கிண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விம்பிள்டனுக்குப் பிறகு அல்கராஸ் பெறும் முதல் கிண்ணம் என்பதால் நெகிழ்ச்சியுடன் பேசினார். கடந்தாண்டும் மெத்வதேவ் அல்கராஸிடம் இண்டியன் வெல்ஸ் ஓபனில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter