பைகளை தவிர்ப்போருக்கு இலங்கையில் கொடுப்பனவு!
பாலித்தீன் பைகளை (ஷாப்பிங் பேக்குகள்) எடுக்காத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழுவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகவலை கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பொறியியலாளர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்பொருள் அங்காடிகளால் வழங்கப்படும் பொலித்தீன் பைகள் தொடர்பில் முடிவெடுப்பதற்காக கடை உரிமையாளர்கள் அண்மையில் சுற்றுச்சூழல் இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான பாராளுமன்றக் குழுவிற்கு அழைக்கப்பட்டபோதுதான் இந்த உடன்படிக்கைக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.