வாட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வாட்ஸ் அப் செயலியானது தற்போது ஸ்டேட்டஸ் வைக்கும் போது குறிப்பிட்ட நபரை டெக் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் வாட்ஸ் அப் செயலியானது மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகின்றது.
இதன்படி குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் வாட்ஸ் அப் செயலி அதிகளவான மக்களின் பாவனையில் உள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் (Instagram) நாம் ஒரு ஸ்டோரி வைக்கிறோம் என்றால் அதில் நமக்கு தெரிந்தவர்களை டெக் செய்து வைக்க முடியும். இதே வசதியை தற்போது வாட்ஸ் அப் செயலியின் ஸ்டேட்டஸிலும் அறிமுகப்படுத்தயிருக்கிறது.
வாட்ஸ் அப் செயலியின் ஸ்டேட்டஸ் இல் ஒரு குறிப்பிட்ட நபரை டெக் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும்போது, அறிவிப்பானது (Notification) சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாட்ஸ் அப் செயலியின் இந்த புதிய வசதி சமீபத்திய பதிப்பிலும் (Latest version) கிடைக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.