OOSAI RADIO

Post

Share this post

விபத்தில் சிக்கிய நடிகை – பணமில்லாமல் தவிக்கும் குடும்பத்தினர்!

மலையாள நடிகை அருந்ததி நாயர் சில தினங்களுக்கு முன் பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அருந்ததி நயாரின் சிகிச்சைக்கு பணம் இல்லாமால் அவரது குடும்பத்தினர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை அருந்ததி நாயர், கடந்த 2014ம் ஆண்டு வெளியான, ‘பொங்கி ஏழு மனோகரா’ என்கிற தமிழ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். இவர் கடைசியாக தமிழில் வெளியான ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், நடிகை அருந்ததி நாயர் தனது சகோதரருடன் கோவளம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.

இதில் இருவரும் படுகாயமடைந்து சுமார் ஒரு மணித்தியாலம் ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி சாலைகளில் கிடந்துள்ளார்.

பின்னர் அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவரது சகோதரர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அருந்ததியின் குடும்பத்தினர், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும், பிரபலங்கள் யாரும் உதவ முன்வரவில்லை என கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் விரைவில் அருந்ததி குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter