வானில் திடீரென மர்மமாக தோன்றிய உருவம்! (Video)
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளி சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் பல்வேறு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஸ்டார்லிங்க் எனப்படும் செயற்கைகோள் உதவியுடன், இணையசேவை பல நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விண்வெளி குறித்தும், செயற்கைகோள் ஏவுகணை குறித்தும் பல்வேறு ஆய்வுகள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தெற்கு கலிபோர்னியா முதல் அரிசோனா வரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ரக ராக்கெட் சோதனை நடைபெற்றது. அச்சமயம் வானில் ஜெல்லிமீன் போல திரள் தோன்றி மறைந்தது.
இதனை கவனித்த உள்ளூர் மக்கள் முதலில் விபரம் புரியாது பதறிப்போன நிலையில், பின் அறிவிப்பு வெளியானதால் மக்கள் அமைதியடைந்தனர். பலரும் ஜெல்லிமீன் போன்ற திரள் சாம்பல் புகையை கண்டு அதிர்ந்துபோயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ உங்களின் பார்வைக்காகவும் இணைக்கப்பட்டுள்ளது.