மழையால் தற்காலிகமாக நிறுத்தப்படும் IPL?
ஐபிஎல் நடப்பு சீசனில் சி.எஸ்.கே -ஆர்.சி.பி அணிகள் மோதும் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வந்தாலும் ஒருசில பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. எனவே நடக்கவுள்ள போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்நிலையில் மழை தொடர்பான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மார்ச் 22 ஆம் திகதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நடக்கவுள்ள போட்டிக்கு மழை அச்சுறுத்தலாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.