அரச ஊழியர்களுக்கு பாரிய பற்றாக்குறை!
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திணைக்களத்தில் தற்போது 311 பேர் மட்டுமே பணி புரிந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த அண்மையில் கொலன்னாவையிலுள்ள அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்துக்கு அண்மையில் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே இந்த ஊழியர் பற்றாக்குறை அவதானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் அனுமதி பெற்ற அலுவலக ஊழியர்கள் 769ஆக இருந்த போதிலும், தற்போது 311 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கோரிக்கையை முன்வைத்து தேவைக்கு ஏற்ப ஊழியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த குறிப்பிட்டுள்ளார்.