மத்திய வங்கியின் சம்பள திருத்தம் – இறுதி முடிவு!
மத்திய வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் தொழில் வல்லுநர்களில் பெரும்பாலோர் ‘தங்கள் சம்பளத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் ஒரு கூட்டு முடிவை எடுத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த முடிவு மார்ச் 16 ஆம் திகதி அன்று நாடாளுமன்ற பொது நிதிக்கான குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-2026 காலப்பகுதிக்கான சம்பளத் திருத்தம், பொதுமக்களின் கண்டனத்தையும், அவர்கள் மத்தியில் அதிக விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையிலேயே, சம்பள உயர்வை நிறுத்தி வைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் நாட்டின் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் மத்திய வங்கி பொறுப்புக்கூறுகிறது.
இந்த முக்கியமான தேசிய ஆணையை அடைவதற்காக, மத்திய வங்கி பல அனுபவம் வாய்ந்த மற்றும் தொழில்முறை பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது.
இந்தநிலையில் தமது பணிகள் முழு திறனுடன் செயல்படும் வகையில் தமது அனுபவம் வாய்ந்த ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே அண்மைய சம்பள திருத்தம் செய்யப்பட்டதாக மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.