OOSAI RADIO

Post

Share this post

ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது!

சென்னையில் நடைபெற்ற 16 வது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடல் பெற்றுக் கொண்டது.

இந்த பாடலை பாடிய வின்டி குணதிலக்க நேற்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சர்வதேச திரைப்படப் பாடல்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்றது.

பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இசை அமைத்த சனுக விக்கிரமசிங்க ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

அங்கு, ஐயோ சாமி பாடலைப் பாடிய வின்டி குணதிலகவுக்கு 2023 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சிறந்த உணர்ச்சிப் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.

அவரை வரவேற்க ஏராளமான மக்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த வின்டி குணதிலக்க, “சர்வதேச விருதை நான் பெறுவது இதுவே முதல் முறை. இலங்கைக்கு சர்வதேச விருது ஒன்றை பெற்றுக்கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” என தெரிவித்தார்.

Leave a comment

Type and hit enter