OOSAI RADIO

Post

Share this post

இலங்கை வீரருக்கும் இந்திய நடிகை இடையே கிசுகிசு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இலங்கை வீரர் மதீர பத்திரனவை நடிகை நேஹா காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.

நடிகை நேஹா , பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் அவரே இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா என்ற கேரக்டரில் நடித்து வருபவர்

இவர் ஏற்கனவே ’பைரவி’ என்ற சீரியலில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ‘பிள்ளை நிலா’ ‘வாணி ராணி’ உள்ளிட்ட ஒரு சில சீரியல்களை நடித்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான இலங்கை வீரருடன் காதல் குறித்து கூறிய நடிகை நேஹா,

‘நான் பொதுவாக கிரிக்கெட் பார்ப்பதில்லை, எப்போதாவது பார்ப்பேன், அப்போதுதான் ஒரு முறை படப்பிடிப்பில் இருந்த போது கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தபோது, பத்திரானா குறித்து கேள்விப்பட்டேன்.

அவரது பௌலிங் எனக்கு பிடித்திருந்ததால் அவர் போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸை நானும் ஷேர் செய்தேன் இதனை வைத்து தான் நான் அவரை காதலிப்பதாக சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது.

முதலில் ஜாலியாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன், ஆனால் விஷயம் விபரீதம் ஆகி வருவதை அடுத்து விளக்கம் அளிக்கிறேன், உண்மையில் நான் பத்திரனாவை நேரில் பார்த்தது கூட கிடையாது, அவர் எப்படிப்பட்டவர் என்பதும் எனக்கு தெரியாது, நான் அவரை காதலிக்கவில்லை என கூறியுள்ளார்.

Leave a comment

Type and hit enter