OOSAI RADIO

Post

Share this post

ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை!

தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை டாப்ஸி. இதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி சமீபத்தில் தான் ஷாருக்கான் உடன் இணைந்து டங்கி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை டாப்ஸிக்கு அவருடைய 10 வருட காதலருடன் திருமணம் என தகவல் வெளிவந்தது.

டென்மார்க் நாட்டை இருந்த பேட்மிட்டன் பயிற்சியாளர் மதியாஸ் போ என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் நடிகை டாப்ஸி. இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் சில புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.

மார்ச் மாதம் இறுதியில் இருவருக்கும் திருமணம் என கூறப்பட்ட நிலையில், கடந்த 23ஆம் தேதி டாப்ஸி – மதியாஸ் போ இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சில திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொண்டார்களாம். டாப்ஸிக்கு திருமணம் முடிந்துவிட்டதா என ஒரு பக்கம் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், மறுபக்கம் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a comment

Type and hit enter