OOSAI RADIO

Post

Share this post

WhatsApp இல் AI யால் இயங்கும் இமேஜ் எடிட்டர்

உலகம் முழுவதும் WhatsApp பயன்படுத்தப்படுகிறது. நிறுவனம் தற்போது AI யால் இயங்கும் இமேஜ் எடிட்டர் வசதியை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

பயனர்கள் வாட்ஸ்அப்பில் படத்தைத் திறக்கும்போது, ​​புதிய பச்சை ஐகான் இருக்கும். இந்த AI எடிட் ஆப்ஷன் உங்கள் பின்னணி படத்தை மாற்றவும் மறுசீரமைக்கவும் உங்களை அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

WeBetaInfo படி, இந்த அம்சம் தற்போது WhatsApp Android பீட்டா பதிப்பு 2.24.7.13 இல் வெளிவருகிறது. இதன் மூலம் இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வாட்ஸ்அப் இதே போன்ற AI அடிப்படையிலான படம் மற்றும் ஸ்டிக்கர் உருவாக்கும் அம்சத்தை சோதனை செய்வதாக முன்பு கூறப்பட்டது.

ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கவில்லை. பீட்டா பதிப்பில் இருந்தும் நிறுவனம் அதை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter