OOSAI RADIO

Post

Share this post

இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி

இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப் பகுதியில் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை சனத்தொகை குறித்த காலப் பகுதியில் 144,395 ஆல் குறைவடைந்துள்ளது.

குறித்த காலப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காரணிகளினால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Leave a comment

Type and hit enter