இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் மாற்றம்
கடந்த சில மாதங்களில் பணவீக்கம் குறைந்துள்ள போதிலும் பொருட்களின் விலைகள் பெரிய அளவில் குறையவில்லை என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஷாமலி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் பிரகாரம் இலங்கையில் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் தனிநபர் மாதாந்த செலவு 16,524 ரூபாவாக இருந்தது. ஆனால் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஜனவரி மாதத்தில் இந்த தொகை 490 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதன்படி தனிநபர் மாதாந்த செலவினம் 17,014 ரூபாவாக பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.