OOSAI RADIO

Post

Share this post

7 நாடுகளுக்கு வீசா கட்டண விலக்கு!

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான வீசா கட்டண விலக்கு மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வீசா கட்டண விலக்கு

இதற்கமைய குறித்த வீசா கட்டண விலக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ரஷ்யா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கே இந்த சந்தர்ப்பம் கிட்டவுள்ளது.

மேலும் இந்த தீர்மானம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter