பசிலின் புதிய திட்டம் அம்பலம்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளது. நிலையில் வெற்றி பெறக்கூடிய கட்சி உறுப்பினர்களை தன் பக்கம் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை பசில் ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாக கைசாத்திட்டுள்ளனர்.
அந்த உடன்படிக்கைக்கு எதிராக உள்ள சஜித் தரப்பில் உள்ள உறுப்பினர்களை வெல்வதே பசில் ராஜபக்சவின் பிரதான நோக்கம் என தற்போது தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய விரும்பாத, சஜித் பிரேமதாசவின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக, தற்போது அமைதியாக இருக்கும் உறுப்பினர்களை இலக்கு வைத்து இந்த புதிய நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.
நாலக கொடஹேவா, டிலான் பெரேரா போன்றோர் ஜி. எல். பீரிஸ் போன்றவர்களை சஜித் பிரேமதாசவின் மிக நெருங்கிய ஆலோசகர்களாகியுள்ளனர். இதன் காரணமாக ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோர் உள்ளக கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
தயா ரத்நாயக்க மற்றும் ஏனைய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சரத் பொன்சேகாவிற்கு எதிராக தொடர்ந்து செயற்பட்டதோடு சஜித் பிரேமதாசவும் அவர்களுடன் இணைந்துகொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.