OOSAI RADIO

Post

Share this post

100 கேட்ச்கள் பிடித்த ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று (08) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.

ஜடேஜா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் சால்ட் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார்.

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார். 100 கேட்ச்கள் பிடித்து 5 ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

விராட் கோலி 110 கேட்ச்கள் பிடித்து முதல் இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 109 கேட்ச்கள் பிடித்து 2 ஆவது இடத்தில் உள்ளார். பொல்லார்டு 103 கேட்ச்களுடன் 3 ஆவது இடத்தில் உள்ளார். 

Leave a comment

Type and hit enter