OOSAI RADIO

Post

Share this post

10 மடங்கு விலை குறைந்துள்ள கீரை வகைகள்!

உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் செலட் உள்ளிட்ட பல்வேறு வகையான கீரைகளின் விலை ஜனவரி மாதத்தை விட இந்த நாட்களில் பத்து மடங்கு குறைந்துள்ளது.

4,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ப்ரோக்கோலி 300 ரூபாய் வரையிலும், 3,000 ரூபாய்க்கு விற்ற சிவப்பு முட்டைக்கோஸ் 200 ரூபாய் வரையிலும், 1,500 ரூபாய்க்கு விற்ற செலட் கீரை 50 ரூபாய் வரையிலும் குறைந்துள்ளது.

இது தவிர 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கொத்தமல்லி இலையின் விலை 80 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

இவ்வகை கீரைகளின் கேள்வி அதிகமாக இருந்தாலும் சுற்றுலா ஹோட்டல்களுக்கான தேவை குறைவாகவே காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா நகரத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் இருந்து நாளொன்றுக்கு 2000 முதல் 3000 கிலோ கிராம் வரையிலான சாலட் கீரைகள் தேவைப்படுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter