இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!
பல மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களின் ஏல விற்பனை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 17 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக, 78 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை 91 நாட்கள் முதிர்வு காலத்தைகொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 25 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
மேலும் 364 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 23 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.