பலாப்பழம் சாப்பிடுங்கள் – இவ்வளவு நன்மை உண்டு!
பலாப்பழம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தனமானது, விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். ஆனால் அதன் நன்மைகள் பலருக்கும் தெரியாது. அந்த வகையில், பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
பலாப்பழம் யாருக்குத்தான் பிடிக்காது. யாராவது பலாப்பழத்தை பிளந்து உரித்துக் கொண்டுத்தால் எத்தனை பழங்களை வேண்டுமானாலும் நாம் சாப்பிடுவோம். ஆனால், அதன் பின் உள்ள ஆரோக்கிய நன்மைகளை நாம் யோசித்திருக்கவே மாட்டோம்.
அந்த வகையில், பலாப்பழத்தின் முக்கிய 5 ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
பலாப்பழத்தில் Glycaemic Index என்பது குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவு சீராகவே இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நன்மையே பயக்கும். இது வயிறு நிரம்பியதாக உணர வைக்கும்.
பலாப்பழத்தில் பொட்டாஸியம் மற்றும் ஃபைபர் அதிக உள்ளது. இது இதய நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும்
பலாப்பழத்தில் குறைவான கலோரியே உள்ளது. இதில் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் வைட்டமிண் பி1, பி3, பி6 உள்ளது.
பலாப்பழத்தில் தாவர ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை சர்க்கரை நோய் உள்பட பல நோய்களை தடுக்கும் வல்லமை கொண்டது.