OOSAI RADIO

Post

Share this post

கஷ்டங்கள் நீங்க இத செய்யுங்க…

சாப்பிட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்படும் கல் உப்பால் எண்ணற்ற பலன்கள் ஏற்படுகிறது.

வாஸ்து சாஸ்திரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் உப்பு வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டி பாசிட்டிவ் எனர்ஜியை தருகிறது.

உப்பு உடல் நலம் சம்பந்தமான பிரச்னைகளைப் போக்கவும், மகிழ்ச்சி, அமைதி, செல்வம் போன்றவற்றை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறது.

கல் உப்பை தண்ணீரில் கரைத்து அத்துடன் மஞ்சள் சேர்த்து வீட்டை சுத்தம் செய்வதால் பாசிட்டிவ் எனர்ஜி வீடு முழுவதும் பரவும்.

மேலும், வீட்டில் உப்பை மண் பாத்திரத்திலோ அல்லது மரபாத்திரத்திலோ வைப்பது சிறந்ததாகும். லட்சுமி கடாட்சம் நிறைந்த உப்பு கடலில் தோன்றுகிறது, லட்சுமி தேவியும் கடலில் தோன்றியவர் என்பதால் உப்பு செல்வம் தரக்கூடியது.

ஒரு பவுலில் கல் உப்புடன் 4 கிராம்பை சேர்த்து வீட்டின் மூலையில் வைத்துவிட்டால் செல்வம், வெற்றி போன்றவற்றை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்தால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி பொருளாதார உயர்வு ஏற்படும்.

வெள்ளிக்கிழமையன்று ஒரு தாம்பாளத்தில் உப்பை பரப்பி அதன் மீது மண் விளக்கை வைத்து தீபம் ஏற்றினால் செல்வ செழிப்பும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும்.

Leave a comment

Type and hit enter