தலையில் அடி – விராட் கோலி சம்பவம்!
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் வீசிய பவுன்சர் குறித்து பேசியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வளம் வருபவர் விராட் கோலி. இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள இவர், இதுவரை 26,000+ ரன்கள், 80 சதங்கள் அடித்து சாதனை நாயகனாக இருந்து வருகிறார்.
தற்போது ஐபில்எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கினார்.
அந்த போட்டியில் அவர் சந்தித்த முதல் பந்தையே மிட்செல் ஜான்சன் பவுன்சராக வீசினார். இதனால் தலையில் அடி வாங்கி கீழே விழுந்தார் விராட் கோலி. இதனையடுத்து அபாரமாக பேட்டிங் செய்த விராட் கோலி சதமடித்து முத்தத்தை காற்றில் பறக்க விட்டு ஜான்சனுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி “அந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியின் முதல் பந்திலேயே ஜான்சன் என்னுடைய தலையில் அடித்தார். அதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.
அந்த அடியால் எனது இடது கண் வீங்க தொடங்கியதால் பார்வை குறைய துவங்கியது. அதை நான் அப்போது கவனிக்கவில்லை. இருப்பினும் உணவு இடைவெளிக்கு முன் அவ்வாறு நடந்ததற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் அதன் காரணமாக சண்டையிட வேண்டும் அல்லது விமானத்தில் வீடு திரும்ப வேண்டும் என்ற 2 விருப்பங்கள் மட்டுமே என்னிடம் இருந்தன.
அப்போது “என் தலையில் அடிக்க அவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? இவரை நான் அடித்து நொறுக்குவேன்” என்பதே என்னுடைய ரியாக்ஷனாக இருந்தது. கடைசியில் அதையே செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.