திடீரென மறைந்த நண்பர் – சோகத்துடன் ரஜினி!
மரணமடைந்த தனது நண்பருக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு,
எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகேஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது..காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்தியவர்..
இனிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன..அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மற்றும் அன்பர்களே.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கன்னட திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்த துவாரகேஷ்(81) மரணம் கன்னட திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.