OOSAI RADIO

Post

Share this post

இன்று இப்படி செய்தால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்!

ஸ்ரீராம நவமி விழா ஏப்ரல் 17 ஆம் திகதி புதன்கிழமை வருகிறது. ஸ்ரீராமர் அவதரித்தது சித்திரை மாத வளர்பிறை நவமி திதியில் என சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு 16 ஆம் திகதி மாலை 05.47 மணிக்கே நவமி திதி துவங்கி விடுகிறது. 17 ஆம் திகதி இரவு 7 மணி வரை மட்டுமே நவமி திதி உள்ளது.

ராம நவமி பூஜை செய்வதற்கு ஏற்ற நேரமாக காலை 09.30 மணி முதல் 10.30 வரையிலான நேரமும், மாலை 04.30 முதல் 05.30 வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது.

ராம நவமியன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிக்க வேண்டும்.

பிறகு ஸ்ரீராமருக்கு பிரியமான வெண் பொங்கல், பருப்பு வடை, நீர் மோர், பானகம் ஆகியவற்றை செய்து படைக்கலாம். எதுவும் முடியாதவர்கள் எளிமையாக இரண்டு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் அல்லது நீர்மோர் வைத்து ராமருக்கு படைக்கலாம்.

அப்படி படைக்கும் போது “ராம் ராம்” என ராம மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அன்று நாள் முழுவதுமே ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பது சிறந்தது.

அன்றைய தினம் அருகில் உள்ள ராமர் கோவில் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடலாமம். அப்போது மறக்காமல் துளசி மற்றும் தாமரை ஆகியவற்றை ராமருக்கு வாங்கி படைக்க வேண்டும்.

கோவில் வாசலில் நின்று, அங்கு வருபவர்களுக்கு நீர் மோர் தானமாக கொடுத்து, அவர்களின் தாகத்தை தணிக்கலாம். குடை, விசிறி போன்றவற்றையும் வாங்கி தானமாக கொடுக்கலாம்.

ராம நவமி அன்று பூஜை செய்யும் போதும் சரி, தானம் கொடுக்கும் போதும் சரி ராம நாமம் சொல்லிக் கொண்டே இருங்கள். ராம் ராம் என சொல்லிக் கொண்டே உங்களின் கோரிக்கைகள் எதுவும் அதை ராமரிடம் முன் வைக்கலாம்.

பல நாட்களாக நீங்கள் நடக்க வேண்டும் என நினைக்கும் விஷயம், நடக்கும் என நினைத்து நடக்காமல் தள்ளி போகும் அல்லது நடக்காமல் இருக்கும் விஷயங்கள், உங்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் என எதுவாக இருந்தாலும் மேலே குறிப்பிட்ட நேரத்தில் ராம நவமி பூஜை செய்து, ராமரை வழிபட்டால் உங்களின் கோரிக்கைகளுக்கு நிச்சயம் ராமர் செவி சாய்த்து அவற்றை நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை.

Leave a comment

Type and hit enter