OOSAI RADIO

Post

Share this post

50 நாடுகளுக்கு இனி விசா இலவசம்!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர்.

குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter