OOSAI RADIO

Post

Share this post

பணத்துக்காக இயக்குனருடன் ரஹ்மான் மோதல்..!

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.

சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால், அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார். திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாமல் இசை கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில், ஏ ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் சுபாஷ் கய் இருவரும் இணைந்து பணியாற்றும் திரைப்படம் தான் யுவராஜ். இந்த படத்திற்காக இசையை கொடுப்பதில் மிகவும் தாமதம் செய்துள்ளாராம் ரகுமான். அந்த சமயத்தில், ரகுமான் எப்படி தாமதிக்கலாம். என்னுடைய கால்ஷீட் உள்ளது. அதை போல், படத்தின் ஹீரோ சல்மான் கானின் கால்ஷிப் இருக்கிறது. நீங்கள் பாடல்களை இதுவரை கொடுக்கவில்லை என ரகுமானுக்கு கடிதம் ஒன்றை எழுதினாராம்.

இதற்கு பதில் அளித்த, ஏ ஆர் ரகுமான் தற்போது லண்டனில் இருக்கிறேன். சென்னை செல்லும் வழியில் மும்பைக்கு வருவேன். அங்கு சுக்விந்தர் சிங் ஸ்டூடியோவில் நாம் இருவரும் சந்திக்கலாம். அங்கே உங்களது பாடல்களை உருவாக்குவேன் என தெரிவித்துள்ளார். அங்கு சுபாஷ் கய் சென்ற போது, சுக்விந்தர் சிங் சில இசை கருவிகளை உருவாக்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, இயக்குனர் சுபாஷை சுக்விந்தர் சிங்கிடம் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார் ரஹ்மான்.

தன்னிடம் ஏ ஆர் ரகுமான் ஒரு பாடலை உருவாக்க சொன்னதாக சுக்விந்தர் சிங் கூறியுள்ளார். இதனால், மிகவும் கோபம் அடைந்துள்ளார் சுபாஷ் கய் கோபத்தில் என்னுடைய படத்திற்கு இசையமைக்க நான் உங்களை தான் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறேன். உங்களுக்கு தான் சம்பளம் கொடுத்து இருக்கிறேன். எதற்காக சுக்விந்தர் சிங்கை இசையை உருவாக்க கூறியுள்ளிர்கள். அதை என் முன் கூற உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என சுக்விந்தர் சிங் தான் வேண்டும் என்றால், அவரை ஒப்பந்தம் செய்கிறேன்.

என் பணத்தை எடுத்துக்கொண்டு சுக்விந்தர் சிங்கை என் படத்தில் இசையமைக்க வைக்க நீங்கள் யார் என சத்தம் போட்டு உள்ளார். அப்போது, ரகுமான் என் பெயருக்காக தான் பணம் கொடுக்கிறீர்கள், என் இசைக்காக அல்ல என்று கூறிவிட்டாராம். இறுதியில் அந்த பாடலை யுவராஜ் படத்திற்கு பதிலாக பயன்படுத்தி உள்ளனர். அந்த பாடல் தான் ஆஸ்கார் விருதை வென்ற ஜெய் ஹோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a comment

Type and hit enter