OOSAI RADIO

Post

Share this post

33 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இலங்கையர் கைது!

கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொமானியாவின் புச்சரெஸ்ட் பகுதியில் 1991ம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையுடன் தொடர்புடைய இலங்கையர் ஜெர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டுக்காக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எதிர்வரும் 23ம் திகதி குறித்த இலங்கையர்கள் ஜெர்மனியிலிருந்து ரொமானியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.

நாடு கடத்தப்பட்டதன் பின்னர் குறித்த இலங்கையர் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் ஜெர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter