30 ஆண்டுகளின் பின் இளையராஜா இலங்கையில்!
கொழும்பில் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜா தான் இசை நிகழ்ச்சிக்காக நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (20) மாலை 6.30 அளவில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பமாகி இன்றும் நாளையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பாடகர்களான மனோ, மதுபாலகிருஸ்ணன், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பிக்கவுள்ளனர்.
சுமார் 30 ஆண்டுகளின் பின்னர் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது.