குழந்தைகளில் உயிரை பறித்த Ice Cream!
கர்நாடகா மாநிலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா – மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் ஒருவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார்.
அவரிடம் ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்ட சில மணித்தியாலத்திலேயே மூன்று பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகளான பூஜா, பிரசன்னா வீட்டிலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், மயங்கிய நிலையில் இருந்த அவர்களது தாயை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் விரைந்து வந்து, உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் பொலிஸார், ஐஸ்கிரீம் விற்ற அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.