கனடாவில் 6 பேர் படுகொலை – வெளியான புது தகவல்!
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட
இலங்கை இளைஞன் தற்போதைக்கு பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.