OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் NIC இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணபிப்பதற்கான இறுதி நாளாக கடந்த 31 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அதனை நீடித்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter