ஐஸ்வர்யாவால் பெரிய பிரச்சனை – கௌரவத்தை விட்ட ரஜினி!
கிட்டத்தட்ட 20 வருடங்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ்ந்தார்கள். இந்த தம்பதிக்கு யாத்ரா லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் வாகரத்துக்கு விண்ணப்பத்திருந்தனர்.
ரஜினிகாந்த் இவர்கள் சேர்த்து வைக்க முயற்சிகள் எடுத்தும் அது பலன் அளிக்கவில்லை. இதனால் ரஜினிகாந்த் சோகத்தில் இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன், ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளர். அதில் அவர் ரஜினிகாந்திற்கு எப்போதெல்லம் குழப்பமான மனநிலையில் இருக்கிறாரோ அந்த சமயத்தில் இயக்குனர் கே பாலசந்தரிடம்தான் ஆலோசனை கேட்பார்.எந்த மணியாக இருந்தாலும் சரி.
அப்படி தான் ஐஸ்வர்யாவால் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அந்த சமயத்தில் கே.பாலசந்தரிடம் நடந்த விஷயத்தை சொன்னார். அதற்கு அவர், இந்த பிரச்சனையை CM ஜெயலலிதாவிடம் சொல் என்று சொன்னார். ஆனால் ரஜினியோ எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரிடம் பேசுவேன் என கூறினார்.
காரணம் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரஜினிகாந்த் அப்படி பேசிய பிறகு கே பாலசந்தர், எனக்கு பொண்ணு முக்கியமா இல்லை கெளரவம் முக்கியமா என்று கேட்டார்.
அதன் பின்னர், ரஜினிகாந்த் ஜெயலலிதாவிடம் பேசி அந்த பிரச்சனையை சரி செய்தார். மேலும் ரஜினிகாந்திக்கு தனுஷ் மீது கோபம் இல்லை. கெஞ்சவெல்லாம் இல்லை. தனுஷும் ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதையை வைத்து இருக்கிறார் என்று அந்தணன் கூறியுள்ள்ளார்.