வீட்டில் பூனை இருந்தால் பணப்புழக்கம் குறையும்!
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பலருக்கு விருப்பம் இருக்கும்.
சிலர் நாய்களை வளர்க்கிறார்கள், சிலர் கிளிகள் அல்லது பிற பறவைகளை வளர்க்கிறார்கள், சிலர் பூனைகளையும் வளர்க்கிறார்கள்.
மத சம்பிரதாயங்களின் படி, உயிரினங்களை வளர்ப்பது மங்களகரமானதாகவும், நல்லொழுக்கமாகவும் கருதப்பட்டாலும், ஜோதிடத்தில் எந்த உயிரினமும் அதன் ராசி அடையாளத்தின்படி வளர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொட்புடையதாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் எந்த ராசிக்காரர்கள் தங்களது வீட்டில் பூனையை செல்லப்பிராணியாக வளர்க்கக் கூடாது என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
மேஷத்தை ஆளும் கிரகம் செவ்வாய். பூனை ராகுவின் வாகனமாக கருதப்படுவதால் ராகுவால் ஆளப்படுகிறது. மேஷ ராசிக்காரர்கள் பூனையை வளர்த்தால், அவர்களின் வாழ்க்கையில் முகம் சுலிக்க வைக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துக்கொண்டிருக்கும். வீட்டில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மிதுன ராசிக்காரர்கள் புதன் கிரகத்துடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜோதிட சாஸ்திரப்படி, மிதுன ராசிக்காரர்கள் பூனையை வளர்த்தால் மனநலக் கோளாறுகள் ஏற்படும்.
கன்னி ராசியை ஆளும் கிரகமும் புதன்தான். கன்னி ராசிக்காரர்கள் பூனை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். புதனின் அருளால் கன்னி ராசிக்காரர்களுக்கு பணவரவில் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தநிலையில் நீங்கள் பூனையை வைத்திருப்பது ராகுவின் சேட்டையால் நிதி நிலைமை குன்றும்.