எரிவாயு விலையில் மாற்றம்!
நாட்டில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் நிலவி வரும் பதற்ற நிலை தணிந்தால், விலை குறையும் சாத்தியம் உண்டு என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சர்வதேச சந்தையில் விலை குறைவடைந்தால் அந்த நலன்களை நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.