ரச்சிதா பிக்பாஸ் பிரபலத்துடன் நெருக்கம்!
சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார்.
பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசு பொருளாக மாறியது. தன் கணவருடன் சேருவது என்பது நடக்காத ஒன்று என்று கூறும் அளவிற்கு ரச்சிதாவின் போக்கு சென்று கொண்டிருக்கிறது.
தன் வேலையில் பிஸியாக இருந்து வரும் ரச்சிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் தனிமை பற்றிய விசயங்களையும் பகிர்ந்து வந்தார். தற்போது 33 வயதை எட்டியிருக்கும் நடிகை ரச்சிதா, புது வீட்டு ஒன்றினை வாங்கியிருப்பதாக ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். மேலும் பிக்பாஸ் பிரபலம் ஷிவினுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.