இலங்கையில் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி!
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைவதே அதற்கு காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் கடும் வீழ்ச்சியடைந்ததை கொண்டு இந்த முடிவிற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய, எதிர்காலத்தில் வாகனம் கொள்வனவு செய்யும் நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு இந்த செய்தி மிகவும் முக்கியமானதென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தமிழ் வின் தளத்தில் இரு வாரங்களுக்கு முன் வெளியான செய்தி. ஒரு எழுத்து மாறாமல் அப்படியே உள்ளது