OOSAI RADIO

Post

Share this post

நிரந்தர நியமனம் – அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள 8,400 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter