அசானியை அடுத்து மற்றுமொரு இலங்கை இளைஞர்! (Video)
தென்னிந்தியா ஜீ தமிழ் தொலைக்காட்சி இசை போட்டியில் மலையக குயில் அசானியை தொடர்ந்து பண்டாரவளையை சேர்ந்த இந்திரஜித் கலந்துகொள்ள தெரிவாகியுள்ளார்.
முதல்கட்ட குரல் தேர்வில் நந்தா நீ என் நிலா எனும் எஸ் .பி பி. இன் பாடலைபாடி நடுவர்களை புல்லரிக்க செய்துள்ளார் இந்திரஜித்.
அப்பாடலூடாக தனது திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும் வியப்படைய செய்துள்ளார்.
முன்னதாக, இலங்கை தொலைக்காடி ஒன்றில் தனது திறமையை நிருபித்த இந்திரஜித் இடைவிடாத தனது முயற்சியால் இன்று இந்திய தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
தனது இசைப்பயணத்தில் பண்டாரவளை இந்திரஜித் சாதனை படைப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.