அரச ஊழியர்கள் குறித்து ஜனாதிபதியின் முடிவு!
அரச நிறுவனங்களின் ஊழியர்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, வெளிநாட்டு முதலீடுகளுக்கும், அரச நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.
மே தின கூட்டத்தை பிரமாண்டமான முறையில் கொண்டாடவுள்ளோம்.பெருமளவான தொழிலாளர்களை உள்ளடக்கிய வகையில் மே தின கூட்டத்தை நடத்தி எமது பலத்தை உறுதிப்படுத்துவோம். மே தின கூட்டத்தின் போது முக்கிய அரசியல் தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம்.அவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம் ஆகவே எமது கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.