தொடர்ந்து தோல்வி – உத்தரவை மீறிய CSK!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், 250 ரன்களை கூட எளிதில் அணிகள் எட்டிவிடுகிறார்கள்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்ற ஆண்டுகளை போல இல்லாமல், சற்று மாறுதலான ஒன்றாக இருக்கின்றது. சாதாரணமாக அணிகள் 200 ரன்களை கடந்து விடுகிறார்கள். குறிப்பாக பல அணிகள் 250 ரன்களை எட்டியது. 260 ரன்களும் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்டன.
இது Impact Player விதியின் காரணமாக என்று ஒரு புறம் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், மறுபுறத்தில் இதில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான BCCI உத்தரவும் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னர் சென்னை மைதானத்தில் பிட்ச் பந்துவீச்சிற்கு சாதகமான ஒன்றாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு தொடரில் சென்னை மைதானத்திலும் 200 ரன்கள் மேல் முதல் இன்னிங்ஸில் குவிக்கப்பட்டு, அதனை லக்னோ வெற்றிகரமான சேசிங் செய்தும் உள்ளது.
மைதானத்தின் தன்மை பேட்டிங்கிற்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. நிறைய ரன்கள் எடுக்கும் போட்டியையே ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால், பேட்டிங் செய்வதற்கான ஏதுவான பிட்ச் தயார் செய்யும் படி, இந்திய அணியின் நிர்வாகம் வாய்மொழியாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, பழைய படி அதாவது பந்துவீச்சிற்கு கைகொடுக்கும் படி மைதானத்தின் பிட்சை மாற்றுமாறு, சென்னை அணி தரப்பில் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதன் வெளிப்பாடு, போட்டியிலும் தென்பட்டது. இரண்டாவது பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ரன் எடுக்க திணறியது. பிசிசிஐ உத்தரவை மீறி, சென்னை அணி செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும் தற்போது பேசப்பட்டு வருகின்றது.