மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு
இந்த மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது பிரச்சினைகளோ இதுவரை பதிவாகவில்லை.
மழையுடன் கூடிய சிறிய நீர்வீழ்ச்சிகளை காட்டி மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
புவியியல் வல்லுனர்கள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அவதானித்து அறிக்கை அளிக்கும்.
மேலும் இந்த மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.