இளம் தமிழ் இசையமைப்பாளர் திடீர் மரணம்
28 வயதான இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் இன்று மரணமடைந்தார்.
அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராக்கதன்’, ’மேதகு’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் பிரவீன்குமார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் இன்று காலை 6.30 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
28 வயதில் இவர் காலமாகியிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பிரவீன்குமார்.
இந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 6.00 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.