OOSAI RADIO

Post

Share this post

எரிபொருள் விலை குறைப்பு – பொருட்கள் விலைகள்?

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் குறையவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் என்பன குறைக்கப்பட்ட போதிலும் அதன் ஏனைய பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தெளிவுபடுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள், மின்சாரக் கட்டணம் மற்றும் எரிவாயு என்பனவற்றின் விலைகள் சிறிய தொகையில் அதிகரித்தாலும் ஏனைய பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் விலை குறைக்கப்படும் போது மக்களுக்கு அந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறுவதில்லை என சபாநாயகா மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவூட்ட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter