OOSAI RADIO

Post

Share this post

விபச்சார விடுதி முற்றுகை – மூவர் கைது!

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சிறிய தேநீர் கடை நடாத்தி வந்த உரிமையாளர் தனது கடைக்கு பின்னால் உள்ள வீட்டில் விபசார விடுதியை நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கண்டி,இரத்தினபுரி பகுதியை சேர்ந்த வயது (44,45) இரு பெண்களும் வீட்டு உரிமையாளரும் (வயது 38) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக இவ் விபச்சார விடுதி நடாத்தப்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவருகிறது

கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட உரிமையாளரையும் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter