OOSAI RADIO

Post

Share this post

18 வயது இளைஞனுடன் 2 மாதங்கள் தங்கியிருந்த 14 வயது சிறுமி!

மாத்தளையில் வீடொன்றில் 14 வயதுடைய சிறுமி ஒருவருடன் 2 மாதங்கள் தங்கியிருந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இதன்போது குறித்த இளைஞனுக்கு உதவிய மேலும் மூவரையும் அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அலவத்துகொடையில் வசிக்கும் பெண்ணொருவர் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இரவு முதல் தனது பேத்தி காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சிறுமி தனது காதலனுடன் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து நேற்றையதினம் (01-05-2024) பொலிஸ் நிலையத்திற்கு தனது பாட்டியுடன் வந்த குறித்த சிறுமி, தனது 18 வயதுடைய காதலனுடன் சென்று மாத்தளை பிரதேசத்தில் இரண்டு மாதங்களாக வீட்டில் தங்கி இருந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில், 14 வயது சிறுமியுடன் தங்கியிருந்த குற்றத்திற்காக 18 வயதுடைய காதலனையும், அவருக்கு உதவிய மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரு வீடுகளுடைய உரிமையாளர்களும், மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை இன்றையதினம் (02) கண்டி நீதவான் முன் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter