OOSAI RADIO

Post

Share this post

மரக்கறிகளின் விலைகளில் அதிரடி மாற்றம்!

இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் உயரும் சாத்தியம் இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute) தெரிவித்துள்ளது.

மரக்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் ஏனைய உணவுப் பயிர்களின் விலை நிலைகள் தொடர்பில் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள சூழ்நிலைகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கும் போதே அந்த நிறுவனம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.

மே மற்றும் ஜூன் மாதங்களின் கடைசி இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்தால், ஜூன் மாதம் வரை மரக்கறிகளின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இருப்பினும் இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகளில் பெரியளவில் மாற்றம் ஏற்படாது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், எதிர்காலத்தில் அரிசியின் விலை அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன்படி கீரி சம்பா மற்றும் சம்பா போன்றவற்றின் விலை அதிகரிக்கக் கூடும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter