அட்சய திருதியை – யாருக்கு தங்கம், பணம் கிடைக்கும்
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், அட்சய திருதியை சுப தினம் கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் நாம் எந்த சுப காரியத்தை செய்கிறார்கள் அதற்கு நூறு மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் பெருகும் என்பது மக்கள் நம்புகின்றனர்.
தங்கம் மட்டுமல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய தான தர்மங்கள் மூலம் உங்களின் புண்ணியங்களும் பெருகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். இந்த அற்புத நாளில் சிறப்பான பலன்கள் பெற உள்ள ராசிகள் யாருன்னு தெரிந்து கொள்வோம்.
நட்சத்திரத்தை நாளில் உருவாகக்கூடிய மங்கள யோகத்தால் ரிஷப ராசியினருக்கு வாழ்க்கையில் மிகச் சிறப்பான அதிர்ஷ்டமும், யோகமும் கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு தொழில் அல்லது வியாபாரத்தில் உங்களுக்கான வாய்ப்புகள் பெருகும். நீங்கள் இதற்கு முன் செய்த முதலீடுகள் மூலம் பெரிய லாபத்தை பெற்றிடலாம். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அதனால் நீங்கள் திட்டமிட்ட வேலைகளை முடிப்பதற்கான முயற்சியில் இறங்குவது நல்லது. வியாபாரத்தில் லாபத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.
மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு அட்சய திருதியை அதிர்ஷ்ட பலத்தால், உங்கள் வாழ்க்கையில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். சுபயோகத்தின் பலன்களை பெறுவீர்கள். பொன் பொருள் சேரும். வசதிகள் பெருகும். உங்கள் குடும்பத்தின் தேவைகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள், வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். போட்டிகளில் நல்ல வெற்றிகள் உண்டாகும்.
கடக ராசி சேர்ந்தவர்களுக்கு அட்சய திருதியை மங்கள நாளில் வருமானம் பெருகும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை சிறப்பாக அடைய முடியும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சாதக சூழல் நிலவும். எதிர்காலத்திற்காக சேமிக்க முடியும். உங்கள் வீட்டில் திருமணம் அல்லது குழந்தை பேரு மூலம் புதிய உறுப்பினர்கள் வரலாம்.
துலாம் ராசிக்கு இந்த அட்சய திருதியை சுப நாலானது வாழ்க்கையில் செழிப்பையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்க கூடியதாக இருக்கும். உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வருமான வாய்ப்புகள் உண்டாகும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். திருமணம் பாக்கியம் உண்டு. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்துடன் மனதிற்கு பிடித்த வகையில் சுற்றுலா சென்று வர வாய்ப்புள்ளது. உங்களின் நிதி நெருக்கடிகள் குறையும். சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு அட்சய திருதியைக்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும். நிதி நிலை தடுமாற்றங்களில் இருந்து மீண்டு, வருமானம் உயர ஆரம்பிக்கும். சொந்த தொழில் செய்யக்கூடிய அவர்களுக்கு அதிகம் சம்பாதிக்க முடியும். மேலும் பணத்தை சேமிக்கவும் முடியும். உங்களின் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். அலுவலகத்தில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட, உங்கள் செயல்களில் நல்ல வெற்றி உண்டாகும். உங்களுக்கு வர வேண்டிய நிலுவை தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.